யாழ்ப்பாண நகரில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது

Kanimoli
3 years ago
யாழ்ப்பாண நகரில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது

யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் திருட்டு அதிகரிப்பு
யாழ்ப்பாண மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! | Sri Lanka Jaffna Police Peoples Cycle Robbery

இவ்வாறு கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள் யாழ்ப்பாண காவல்துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று மதியம் யாழ் நகரப் பகுதியில் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் திருடப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றின் சிசிரிவி கமராவின் உதவியுடன் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவரிடமிருந்து 6 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4