இலங்கையில் 24 கரட் பவுண் 1,80,250 ரூபாவாக பதிவு

#SriLanka
இலங்கையில் 24 கரட் பவுண் 1,80,250 ரூபாவாக பதிவு

உலக சந்தையில் நேற்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 638,635 ரூபாவாக பதிவாகியது. இலங்கையில் கடந்த சில தினங்களை விட நேற்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டது. நேற்றைய தங்க நிலவரத்தின்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியது. 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 157,750 ரூபாவாக பதிவாகியது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,250 ரூபாவாக பதிவாகியதுடன் கடந்த மாதம் 30ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாகவும், கடந்த திங்கட்கிழமை (04) 168,850 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

உலக அரசியல் நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது. தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும்.

தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க இலாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4