ரயில்கள் ஓடுவதில் மீண்டும் சிக்கல்

Mayoorikka
3 years ago
ரயில்கள் ஓடுவதில் மீண்டும் சிக்கல்

ரயில் நிலைய ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று காலை பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், காலை 11.50 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் விரைவு ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டை, மருதானை ஆகிய ரயில் நிலைய அதிபர்களும் கடமைகளிலிருந்து விலகியுள்ளனர்.

தற்போது பல ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ரயில்வே தலைமையக வாயிலை மறித்து எரிபொருள் கோரி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4