கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தம் - தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை

Kanimoli
3 years ago
கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தம் - தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாளை காலை 6 மணிக்குள் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4