இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான தண்டனை - சரத் பொன்சேகா

Kanimoli
3 years ago
இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான தண்டனை - சரத் பொன்சேகா

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் உட்பட இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் இராணுவத் தளபதி, இராணுவம் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இன்று (06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.

 மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்ட வேண்டாம்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை சுட்டுவதை தவிர்க்குமாறு காவல்துறை அதிகாரிகளிடமும் இராணுவத்தினரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், காவல்துறை உத்தியோகத்தர்கள் அவதானமாக நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4