நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியோரை விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

Prathees
3 years ago
நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியோரை விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று (06) தீர்மானித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 27ஆம் திகதி இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களையும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் நாணயச் சபை ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நேற்றைய அமர்வின் பொது, பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் அஜித் நிவார்ட் கப்ரால் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது சேவை பெறுநர் சார்பில் ஆட்சேபனையைத் தெரிவிக்கவுள்ளதாக மன்றில் அறிவித்தார்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர், மனுக்கள் சார்பான ஆட்சேபனையை ஆற்றுப்படுத்துமாறு பிரதிவாதிக்கு மன்று உத்தரவிட்டது.

மேலும், அதற்கு எதிர்ப்பு ஆட்சேபனை இருந்தால் 22ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனுதாரருக்கும் நீதிமன்றம் அறிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4