ஜப்பானிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவி!

Mayoorikka
3 years ago
ஜப்பானிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவி!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

 அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தனது நிர்வாக காலத்திலும் தற்போதும் மேம்படுத்துவதற்கு ஜப்பான்  காட்டிய அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

மேலும், இலங்கைக்கு தேவையான மருந்துகள் குறித்து தாம் முன்னதாக ஜப்பானிய தூதரகத்திற்கு அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்நிலையில், இம்மாதத்தில் ஜப்பானிய அரசாங்கத்தினூடாக 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்க தயாராக இருப்பதாக ஜப்பானிய தூதுவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4