லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

Kanimoli
3 years ago
லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். 

ஜூலை 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொழும்பில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜூலை 9ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளது. இதனையடுத்து ஜூலை 11ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கும்.

கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோகிராம் எடையுள்ள 140,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பின் நாளாந்தம் மொத்தம் 25,000 கொள்கலன்கள் விநியோகிக்கப்படும். இந்த நிலையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும்.

அடுத்த நான்கு மாதங்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4