ஜனாதிபதி மாளிகைக்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

Kanimoli
3 years ago
 ஜனாதிபதி மாளிகைக்கு  நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

  கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக அங்கு தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலைமையில் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவ இடத்தில் வீதித் தடைகளை அமைத்து பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வீதித்தடைகள் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4