பெரும்பான்மையான மக்கள் இன்னமும் மஹிந்தவை நேசிக்கிறார்கள்...:சாகர காரியவசம்

Prathees
3 years ago
பெரும்பான்மையான மக்கள் இன்னமும் மஹிந்தவை நேசிக்கிறார்கள்...:சாகர காரியவசம்

மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பிரதான பலமாக கொண்டு இந்த நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் திறன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் அன்பும் மரியாதையும் இன்னும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகள் உட்பட ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் பங்களிப்பு தீவிரமாகப் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4