உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Kanimoli
3 years ago
உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(04) இரவு மீட்கப்பட்டுள்ளது.

கோமாரி பிரதேசத்தை சேர்ந்த பெரியதம்பி சற்குணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உமரி பகுதி கடற்கரையில் உயிரிழந்த நிலையில், சம்பவதினமான நேற்று இரரவு 6.30 மணியளவில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4