தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்றும் பல ரயில் சேவைகள் இரத்து

Mayoorikka
3 years ago
தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்றும் பல ரயில் சேவைகள் இரத்து

 இன்றும்(05) பல ரயில் சேவைகளை இரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு, ரம்புக்கனை மற்றும் பொல்கஹவெல வரை முன்னெடுக்கப்படவிருந்த 04 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
 
தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சேவைக்கு வருகை தருவதில் ரயில்வே ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கலே இதற்கான காரணமென நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சில ரயில் சேவைகள் தாமதமாகவேனும் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4