எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் - லிட்ரோ நிறுவனம்

Kanimoli
3 years ago
 எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் - லிட்ரோ நிறுவனம்

இலங்கைக்கு நாளை வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன்,அதற்கமைய, இந்த எரிவாயு கையிருப்புக்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4