வட்டுவாகல் பகுதியில் பதற்ற நிலை

Kanimoli
3 years ago
 வட்டுவாகல் பகுதியில் பதற்ற நிலை

முல்லை வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை (11-07-2022) நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த நிலையில் பொங்கலுக்குரிய ஏற்பாடாக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இருந்தபோதிலும் இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் ஏ – 35 வீதியை மறித்துப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டபோதிலும் தீர்த்தம் எடுக்கச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதன் தொடராக அங்கு ஒன்று திரண்ட கிராமத்து மக்கள் இராணுவக் காலரணின் வேலிகளை அகற்றி அப்புறப்படுத்திவருகின்றனர்.

அந்தப் பகுதியில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் காணப்படுவதால் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4