கொழும்பை முற்றுகையிட தயாராகும் தேரர்கள் - தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை!

Nila
3 years ago
கொழும்பை முற்றுகையிட தயாராகும் தேரர்கள் -  தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை!

அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் இந்த விடயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை தொடர்ந்து அராஜக நிலைக்கு கொண்டு செல்லாமல் எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவேண்டும்.

அவ்வாறு விலகாவிட்டால், நாட்டில் இருக்கும் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்துவந்து 7ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அராஜக நிலைமையை சீர் செய்வதற்கு உடனடியாக செயற்படுமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக கைச்சாத்திட்டு அனுப்பிய கடிதத்துக்கு ஆரோக்கியமான பதிலொன்றை அரசாங்கங்கம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4