ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது

Kanimoli
3 years ago
ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை , அருகில் இருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்ட வேளை , வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.

அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்திய சாலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4