மக்கள் மீது மோத வந்த பேருந்து; முல்லைத்தீவில் பதற்றம்!

Mayoorikka
3 years ago
மக்கள் மீது மோத வந்த பேருந்து; முல்லைத்தீவில் பதற்றம்!

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கு வந்த வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்து ஒன்றை, நேர அட்டவணைக்கு மாறாக  சாரதி எடுத்துச் செல்லமுற்பட்ட போது குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்தில் மக்கள் ஏறுவதற்கு முன்னதாகவே அதை கவனிக்காது பேருந்தை சாரதி செலுத்திய நிலையில், வீதியில் கூடிய ஏனைய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பேருந்தினை மறித்தபோதும் அதனை பொருட்படுத்தாது பேருந்தினை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது மக்கள் சிலர் மீது பேருந்து மோத முற்பட்டபோதும் பேருந்தில் ஏறிய பயணிகளை உரியவகையில் ஏற்றாதும்  அபாயகரமான முறையில் சாரதி பேருந்தினை எடுத்து சென்றார்  

இதனை தொடர்ந்து பேருந்தினை துரத்தி சென்ற சிலர் அதை மறித்துள்ளதுடன் சாரதி மீது  தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன்போது காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4