நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

Prabha Praneetha
3 years ago
நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

இந்தநிலையில் மருந்தகங்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வாகனங்களுக்கான எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மருந்தகங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான மருந்துகளே காணப்படுவதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4