வெளிநாட்டு யுவதிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் !!

#SriLanka #Trincomalee #Police
வெளிநாட்டு யுவதிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் !!

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை நேற்று (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர்.

இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞன் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சட்டவைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4