இன்று முதல் அனைத்து வார நாட்களிலும் திறந்திருக்கும்: வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Mayoorikka
3 years ago
இன்று முதல் அனைத்து வார நாட்களிலும் திறந்திருக்கும்: வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு இன்று (4) முதல் அனைத்து வார நாட்களிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக சேவைகளுக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் கொன்சியூலர் பிரிவு பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4