இன்றைய வேத வசனம் 04.07.2022: ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 04.07.2022: ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.. 
யோவான் 15:13

2021 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79ஆம்; ஆண்டு நினைவு ஆண்டு. நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிப்பதற்காக நினைவுகூரப்படுகிறது.

ஆகஸ்ட் 8, 1944 அன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆரம்பத்தில், காந்தி, “செய் அல்லது செத்து மடி” என்னும் தனது புகழ்பெற்ற வாக்கியத்தைக் கூறினார்.

மேலும், “நாம் இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் மரிப்போம்; எங்கள் அடிமைத்தனம் நீடிப்பதைக் காண நாங்கள் இருக்கமாட்டோம்” என்றும் கூறினார். 

தீமையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் தன்னைத்தானே வருத்திக்கொள்ள விழைவது கிறிஸ்துவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை..” (யோவான் 15:13). இந்த வார்த்தைகள் கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் போது சொல்லப்பட்டது.

ஆனால் இந்த வகையான அன்பின் விலை மற்றும் ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்:

ஒருவர் தனது உயிரை மற்றொரு நபருக்காக விருப்பத்துடன் தியாகம் செய்யும் போது ஒரு அன்பு எடுத்துக்காட்டப்படுகிறது. மற்றவர்களை தியாகமாக நேசிக்க இயேசுவின் அழைப்பு “ஒருவருக்கொருவர் அன்புகூருங்கள்” (வச. 17) என்ற அவருடைய கட்டளையின் அடிப்படையாகும்.