தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவளிக்க சுமார் ரூ. 45 மில்லியன் செலவு

Kanimoli
3 years ago
  தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவளிக்க சுமார் ரூ. 45 மில்லியன் செலவு

இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கிய தெஹிவளை விலங்கியல் பூங்கா ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

1936 இல் நிறுவப்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் தற்போது சுமார் 4,000 விலங்குகள் உள்ளன, இந்நிலையில் அங்கிருக்க கூடிய விலங்குகளுக்கு உணவளிக்க சுமார் ரூ. 45 மில்லியன் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,

அதன்படி, நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு 86 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘சத்வ சாவியா’ என்ற புதிய வளர்ப்பு வேலைத்திட்டமும் நன்கொடை திட்டமும் இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் எந்தவொரு பிரஜையும் ஒரு விலங்கு அல்லது விலங்குகளின் குழுவின் பொறுப்பை ஏற்க முடியும், மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவிலுள்ள விலங்குகளுக்கு போதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் வீழ்ச்சியால் நிலைமை மோசமடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4