கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை எரிபொருள் காவல்துறையினால் மீட்பு

Kanimoli
3 years ago
கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை எரிபொருள் காவல்துறையினால் மீட்பு

கிளிநொச்சி - நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை எரிபொருள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த தொகை எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல் மற்றும் 25 லீற்றர் மண்ணெண்ணெய் அடங்கிய 35 பீப்பாய்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை - சாய்ந்தமருது எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளுக்கான துண்டுச் சீட்டு விநியோகிக்கப்பட்ட போது அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்போது காயமடைந்த இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4