ஞானசார தேரர் முஸ்லிம்களிடத்தில் மன்னிப்புக் கோரல்

Nila
3 years ago
ஞானசார தேரர் முஸ்லிம்களிடத்தில் மன்னிப்புக் கோரல்

இல்லாத பொல்லாத அவதூறுகளால் முஸ்லிம்களை இழிவுபடுத்தி கொடுமைப்படுத்திய கலகொடாத்தா ஞானசார தேரர் முஸ்லிம்களிடத்தில் கேட்க முன்வந்திருக்கும் மன்னிப்பில் மகத்துவம் இருக்காது என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று (03) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமத்துவத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வந்த மக்களிடத்தில் அபாண்டமான பொய்களால் முஸ்லிம்களையும் முஹம்மது நபியையும் அல்லாஹ்வையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் போன்றவர்களால் வளர்க்கப்பட்ட இன மத குரோதங்களால் பிரிவினைகளும் பரிய பொருளாதார அழிவுகளுமே ஏற்பட்டன.

இவ்வாறான நேரத்தில் ஞானசார தேரர் முஸ்லிம்களிடத்தில் மன்னிப்புக் கோர முன்வந்திருப்பது நீதிமன்ற தீர்ப்பின் பயத்தினாலான நாடகமாகும்.

எனவே இவ்வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பானது நீதித்துறையின் மகத்துவத்தை மேம்படுத்துவதோடு இவரைப் போன்ற அக்கருமக்காரர்களுக்கு நல்லதொரு பாடத்தையும் புகட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4