எரிபொருள் நெருக்கடியால் அடுத்த வாரம் நாடு முழுவதுமாக முடங்கும்

Kanimoli
3 years ago
எரிபொருள் நெருக்கடியால் அடுத்த வாரம் நாடு முழுவதுமாக முடங்கும்

அடுத்த வாரம் இலங்கை முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளதால் எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இவ் அபாய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு கூட போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை அரசாங்கம் வழங்கிய போதிலும், பல அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் நாட்டின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், எதிர்வரும் 22ம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4