இந்தியாவின் திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு முதல் சரக்கு விமான சேவை நிறுத்தப்படுகிறது

Kanimoli
3 years ago
  இந்தியாவின் திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு முதல் சரக்கு விமான சேவை நிறுத்தப்படுகிறது

  இந்தியாவின் திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு முதல் சரக்கு விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து இருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்பையில், தினசரி சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் அளித்துவந்தது.

இந்நிலையில் , தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னைக்கு 02 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்கு 03 சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் சரக்கு விமான சேவையை நிறுத்திக்கொள்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 தொன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4