உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் உதவி - அமெரிக்கா அறிவிப்பு
#Ukraine
#America
#Dollar
Prasu
2 years ago
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும். ரஷியா இந்தப் போரில் வெற்றி பெறாது என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவையும் உள்ளடங்கி உள்ளன.




