நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்படலாம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோக பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பணியாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு தடைபட்டுள்ளதுடன், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சங்கம் எச்சரித்துள்ளது.



