அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்
Prabha Praneetha
2 years ago

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்வேறு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கினால், தற்போதைய பஸ் கட்டணத்தை விட குறைந்த விலையில் அலுவலக சேவையை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



