940 சுற்றிவளைப்புகளில் 93740 லீற்றர் எரிபொருளைக் கைப்பற்றிய பொலிஸார்
Prathees
2 years ago

சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தமை தொடர்பில் கடந்த காலப்பகுதியில் 940 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
871 சந்தேக நபர்களுடன் 93,740 லீற்றர் எரிபொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையுடன் இந்தச் சுற்றிவளைப்பு தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



