முதல் அலையை விட இரண்டாவது சுனாமியாக முன்னோக்கி வரும்!
Mayoorikka
2 years ago

அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலன்தொட்டவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற, மக்கள் நம்பும் நம்பகமான மற்றும் நிலையான அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது நாங்கள் இரண்டாவது அலையைத் தொடங்கிவிட்டோம். முதல் அலையை விட இரண்டாவது சுனாமியாக முன்னோக்கி வரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.



