க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

Mayoorikka
3 years ago
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
  
எரிபொருளை பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதால், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஒழுங்கமைத்தன் பின்னரே சாதாரணத் தர பரீட்சை விடைத்தாள் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியும்.

அவ்வாறின்றேல், ஆசிரியர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4