உயர்தர பரீட்சைபெறுபேறு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இடைநிறுத்தம்

Kanimoli
3 years ago
உயர்தர பரீட்சைபெறுபேறு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இடைநிறுத்தம்

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதற்கமைவாக, 2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரயோக பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, எரிபொருள் நெருக்கடியால் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4