கோட்டாபயவுக்கு உயர்பீட இறுக்கம்

Kanimoli
3 years ago
கோட்டாபயவுக்கு உயர்பீட இறுக்கம்

இலங்கையிலுள்ள நான்கு முக்கிய பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 10 அம்சங்களுடன் அவசர   கடிதமொன்றை எழுதி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

இத்தருணத்தில் கட்சி அரசியலில் ஈடுபடுவதாக அரச தலைவர் மீது குற்றம் சுமத்திய அவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினர்.

சரியான பொருளாதாரத் திட்டமில்லாமல் செயற்படும் நிர்வாகத்தின் விளைவாகவே இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாகவும் மாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Gallery Gallery Gallery

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4