யாழ்ப்பாணத்தை சேர்ந்த பதின்ம வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்!

Kanimoli
3 years ago
 யாழ்ப்பாணத்தை சேர்ந்த பதின்ம வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்!

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த  பதின்மவயது முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் அவர்  கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணைகள் அடிப்படையில் குறித்த சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதேவெளை குறித்த சிறுமியை திருமணமான நபர் ஒருவர் கண்டிக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4