தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல்

Kanimoli
3 years ago
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்த போது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான நிஷாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், 

அண்மையில் பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தேன்.

இதன் காரணமாகவே இது திட்டமிட்டு இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாமென்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4