சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 506 பேர் கைது!

Mayoorikka
3 years ago
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 506 பேர் கைது!

கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க பயன்படுத்திய 8 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினரின் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 91 பேர் கொண்ட குழு, அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4