குறைந்த விலை அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து அதிக விலையில் விற்கும் மில் உரிமையாளர்கள்!

Mayoorikka
3 years ago
குறைந்த விலை அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து  அதிக விலையில் விற்கும் மில் உரிமையாளர்கள்!

வெளிநாட்டு அரிசியை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, உள்நாட்டு அரிசியுடன் கலந்து, முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் உட்பட ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிக விலைக்கு விற்பதாக  அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  தலைவருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். 

  
இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரிசி கையிருப்பு இருப்பதாகவும், அவற்றை அரசாங்க உத்தரவாத விலையில் விற்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய இயற்கை விவசாயத்தினால் நாட்டின் நெற்செய்கை அழிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும், ஒரு தொழிலதிபர் என்ற வகையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தனது பங்களிப்பைச் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4