எரிபொருளை பதுக்கி வைத்திருந்த மேலும் இருவர் கைது!
Mayoorikka
2 years ago

அரணாயக்க – வெலிமன்ன பிரதேசத்தில் சட்டவிரோதமாக, எரிபொருளை சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி 57 வயதுடைய சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 186 லீற்றர் டீசல் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், எதிர்வரும் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சபுகஸ்கந்த – மாகொல – இசுரு மாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் 820 லீற்றர் டீசலுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



