இலங்கைக்கு தற்போது உதவ முடியாது!! ஜப்பான் அதிரடி அறிவிப்பு

Nila
3 years ago
இலங்கைக்கு தற்போது உதவ முடியாது!! ஜப்பான் அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், எனவே இலங்கைக்கு இந்த நேரத்தில் ஆதரவளிக்காது என்றும் ஜப்பான் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை நேற்று சந்தித்த கொழும்பில் சந்தித்த போது ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.

உலக நாடுகளிடம் இலங்கை உதவி கோரியுள்ள நிலையில், தற்போது வரையிலும் எந்த நாடுகளும் பாரிய அளவில் உதவிகளை வழங்க முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில், தற்போது இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4