பழங்கால சிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...

Prathees
3 years ago
பழங்கால சிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் செம்பு மற்றும் தங்கம் கொண்ட பழங்கால சிலையை மோசடியான முறையில் விற்பனை செய்த ஒருவரை வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மொரகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

வவுனியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வவுனியா தள கட்டளைப் பரிசோதகர் ஏ.எம்.பி.என். பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு மொரகொட, மெகொடவெவ பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சிலையுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

பழங்கால பெறுமதியான தங்க சிலையை மோசடியான முறையில் விற்பனை செய்ய முற்பட்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி 12 போர் வெடிமருந்துகளை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4