எரிபொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Prathees
2 years ago

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதனை அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.
இலஞ்சம் பெற்று எரிபொருளை விரைவாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்து எரிபொருளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அதிகாரிகளை முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார்.



