நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கொன்சியூலர் சேவைகளில் கட்டுப்பாடு!

Reha
3 years ago
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கொன்சியூலர் சேவைகளில் கட்டுப்பாடு!

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பொதுமக்களுக்கு கொன்சியூலர் சேவைகளை வழங்குவது தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு, ஜூன் 30, 2022 முதல் ஜூலை 10, 2022 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

கொன்சியூலர் விவகாரப் பிரிவு – கொழும்பு – consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – யாழ்ப்பாணம் – jaffna.consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – மாத்தறை – matara.consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – கண்டி – kandy.consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – திருகோணமலை – trincomalee.consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – குருநாகல் – kurunegala.consular@mfa.gov.lk

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4