40, 000 டன் எரிபொருள் அடங்கிய 4 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன
Kanimoli
3 years ago
கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள் அடங்கிய 4 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தலைமையிலான தூதுக்குழுவினர் இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்தினர்.
அந்த சந்திப்பின் பயனாக, கட்டணம் செலுத்தல் அடிப்படையில் எரிபொருளை நாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே