3 வயது குழந்தையொன்று குளத்தில் விழுந்து பலி

Kanimoli
3 years ago
3 வயது குழந்தையொன்று குளத்தில் விழுந்து பலி

பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலாபொக்க மேற்பிரிவில் 3 வயது குழந்தையொன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், தனது வீட்டுக்கு முன்பாக மீன்கள் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குளத்தில் வீழ்ந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த ஆண் குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் சடலம் மடுல்கல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மடுல்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4