தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி யாழ் கிராம சேவகர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

Kanimoli
3 years ago
தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி யாழ் கிராம சேவகர்கள்   போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

 யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுடனர். தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சுகயீன விடுப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட போதிலும் தமக்கான தீர்வு கிடைக்க பெறாததால் தாம் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை பணியை தொடர மாட்டோம் என கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ர்ப்பு போராட்டத்தில், கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா? அல்லது அநாவசிய அலுவலர்களா? எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களை புறக்கணிக்காதீர்கள், கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்கள் பொருளாதார நெருக்கடி காலத்தில் ??? என பதாதைகள் ஏந்தி இருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4