யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு!

Mayoorikka
3 years ago
யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பான நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை, கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் நாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்திருக்கின்றோம்.  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
என்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4