இளைஞர்கள் முற்றுகை அனுமதி மறுத்த இளைஞர்கள்

Kanimoli
3 years ago
இளைஞர்கள் முற்றுகை அனுமதி மறுத்த இளைஞர்கள்

வவுனியா 4ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 11 30 மணியளவில் எரிபொருள் நிரப்ப வந்த காவல்துறையினரை இளைஞர்கள் முற்றுகையிட்டதால் பதற்றநிலை ஏற்பட்டது.

எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெட்ரோல் முடிவடைந்து விட்டது என தெரிவித்த நிலையில் இரவு 11 30 மணியளவில் அந்த எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் அவர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கொள்கலன்களை ஏற்றிச் சென்று எரிபொருள் நிரப்பியுள்ளனர்.

அதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் அவர்களின் வாகனத்தையும் காவல்துறையினரையும் முற்றுகையிட்டனர்.

அதன் பின்னர் அவ்விடத்தில் இருந்து சில காவல்துறையினர் சென்றதுடன் காவல்துறையின் வாகனத்தை எடுத்துச் செல்ல இளைஞர்கள் அனுமதி மறுத்த நிலையில் வாகனத்தின் சாரதியான காவல்துறையினர் மாத்திரம் எரிபொருள் நிலையத்தில் காலை வரை நின்றிருந்தார்.

பின்னர், காலை வருகைதந்த பூவரசங்குளம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தவறுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து காவல்துறையின் வாகனத்தை எடுத்துச் செல்வதற்கு இளைஞர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4