மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

Prabha Praneetha
3 years ago
மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை என்பவற்றால் மருத்துவர் துறை பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று இன்று பகல் நடைபெற்றது இச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அதாவது வைத்தியர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

அதேநேரம் வைத்தியசாலைகளில் முக்கியமான மருந்துகளுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது.

இதனால் மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்

எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்காக எடுத்த முயற்சிகளின் போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது .

இச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4