பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து நாளை இறுதித் தீர்மானம்!

Prabha Praneetha
3 years ago
பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து நாளை இறுதித் தீர்மானம்!

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் நேற்று தெரிவித்திருந்தன.

இதன்படி நாளை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “இந்தத் திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் திகதி அமலுக்கு வரும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்போது இது தொடர்பாக உரிய கணக்கீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அண்மைக்காலமாக எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சந்திப்பொன்று நாளை போக்குவரத்து அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளுக்கு அமைய, பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4